Posts

Tamil Short Stories - father and son father and son relationship.

Image
தமிழ் சிறுகதைகள் / Tamil Short Stories - father and son relationship. ஒரு இளவயது தந்தை, தன் இளைய மகனை மடியிலமர்த்திக் கொண்டு உட்கார்ந்திருந்தார் . எங்கிருந்தோ ஒரு காக்கை பறந்து வந்து வீட்டுக் கூரையின்மீது எதிரே உட்கார்ந்தது. பையன் தந்தையிடம் - ' இது என்ன ? ' என்று கேட்டான் . தந்தை- ' காக்கை ' என்றார். மறுபடியும் பையன்- ' இது என்ன ? ' என்று கேட்டான். மறுபடியும் தந்தை- ' இது காக்கை ' என்றார். பையன் மேலும் மேலும் ' என்ன , என்ன 'என்று கேட்டுக் கொண்டிருந்தான். தந்தையும் பாசத்துடன்  மேலும் மேலும்  'காக்கை ' ' காக்கை' எனக் கூறினார் .  சில வருடங்களில் தந்தை கிழவரானார் , பையன் பெரியவனானான்.  ஒரு நாள் தந்தை பாயில் உட்கார்ந்திருந்தார். பையனைச் சந்திக்க யார் யாரோ வீட்டிற்கு வந்தார்கள் . தகப்பனார் - யார் வந்தார்கள் ? 'எனக் கேட்டார். பையன் பெயரைச் சொன்னான் .  சிறிது நேரத்தில் மறுபடியும் வேறொருவர் வந்தார் . தந்தையும் யாரெனக் கேட்டார் . இந்தத் தடவை எரிச்சலுடன் பையன் சொன்னான் - " நீங்கள் ஏன் பேசாமல் இருப்பதில்லை ? உங்களுக்கு வேலை வெட்டி இ

Tamil short stories - Need of Humanity in day to day life

Image
  தமிழ் சிறுகதைகள் /Tamil short stories - Need of Humanity in day to day life பேருந்துகளில் பயணம் செய்கின்ற போது, ஒரு விஷயத்தைப் பார்த்து நான் மிகவும் வேதனைப் பட்டு இருக்கிறேன். பச்சைக் குழந்தையை இடுப்பில் வைத்துக் கொண்டு, பேருந்தின் ஆட்டபாட்டங்களுக்கு ஈடு கொடுக்க முடியாமல் நின்று கொண்டு அவஸ்தைப்படும் தாய்மார்களுக்கு மனிதாபிமானத்துடன் இடம் கொடுக்க விருப்பமில்லாமல் உட்கார்ந்து கொண்டு இருக்கும் மெத்தை மேதைகள் ஒருபுறம் இருக்கட்டும், பேருந்தில் நிற்குமிடங்களில் தாங்களும் இறங்காமல், அங்கு இறங்குபவர்களுக்கும் வழி விடாமல், நந்தியைப் போல வழி மறைத்து நிற்கிறார்களே, இவர்களைப் பற்றி என்ன சொல்வது? இத்தனைக்கும் அப்படி நிற்கிறவர்கள் விஷயம் தெரியாத பாமரர்கள் அல்லர். படித்தவர்கள், டீக்காக உடை உடுத்திக் கொண்டு இருப்பவர்கள், சொல்லப் போனால் அலுவலகங்களுக்குச் சென்று கொண்டிருக்கும் உததியோகஸ்தர்கள். இறங்குகின்ற வழியில் இவர்கள் நிற்பதால், இவர் அங்கே இறங்கப் போகிறார் என்கிற முடிவுக்கும் வந்து விட முடியாது. இன்னும் நெடுந்தூரம் போய் இறங்க வேண்டியவர்களாக அவர்கள் இருப் பார்கள். ஆனாலும் இறங்குகின்றவர்களுக்குத் தொல

Tamil Short Stories - Basic Human relationship development

Image
தமிழ்  சிறுகதைகள் / Tamil short stories -Basic Human relationship development  மனித உறவுகளை மேம்படுத்தும் சிறு,சிறுவிஷயங்கள் . பல ஆண்டுகளுக்கு முன்பு நான் படித்த ஒரு நிகழ்ச்சி என் நினைவுக்கு வருகிறது .  அப்போது அமெரிக்காவின் ஜனாதிபதியாக ஐஸன் ஹோவர் இருந்தார் . அவர் தன் மனைவியுடன் இந்தியா வுக்கு விஜயம் செய்யவிருந்தார் . அவர் வருகை தரும் சமயத்தில் இந்தியாவின் பிரதமராக இருந்தவர் ஜவகர் லால் நேரு .  ஐஸன்ஹோவர் அமெரிக்காவிலிருந்து புறப்படு வதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு இரவு வெகு நேரம் வரை தூங்காமல் புத்தகம் ஒன்றைப் படித்துக் கொண்டி ருந்தார் . அவ்வாறு அவர் தூக்கத்தைக் கெடுத்துக் கொண்டு புத்தகம் படிப்பதைக் கவனித்த அவருடைய மனைவி , ' ' அந்த புத்தகத்தில் அப்படி என்ன சுவராஸ்யம் , தூங்கா மல் படிக்கிறீர்களே ? " எனக் கேட்டார் .  உடனே ஐஸன்ஹோவர் , ' ' பாரத பிரதமர் நேருவை சந்திக்கப் போகிறோம் அல்லவா ? அவரைப் பற்றியும்அவருடைய நாட்டைப் பற்றியும் தெளிவாக தெரிந்து கொள்வதற்காக அவர் எழுதிய ' டிஸ்கவரி ஆஃப் இந்தியா ' புத்தகத்தைப் படித்துக் கொண்டு இருக்கிறேன் ' ' என்றார் .  அ

Tamil Stories - Good humanbeing shoud be..

Image
Tamil short stories - Good human beings should be... பயனுள்ள கதைகள்/   நல்ல மனிதன் பணக்காரர் ஒருவர் கோவில் ஒன்று கட்டினார். கடவுளைப் பூஜிக்க அர்ச்சகர் ஒருவரை நியமித்தார். கோவிலின் தேவைகளுக்காக அநேக பூமி, வயல், தோட்டங்களை கோவிலின் பெயருக்கு எழுதி வைத்தார். கோவிலுக்கு வரும் ஏழை எளியவர்கள், சாது ஜனங்கள் இரண்டு, மூன்று தினங்கள் தங்கினாலும் அவர்கள் அனைவருக்கும் கடவுளின் பிரசாதம் கிடைக்கும்படி செய்தார். கோவிலின் சொத்துக்களையும், மற்ற வேலைகளையும் சரிவர நடத்திச் செல்ல அவருக்குத் தகுதி வாய்ந்த ஒரு மனிதர் தேவைப்பட்டார். பல மனிதர்கள் பணக்காரரிடம் வந்தார்கள். கோவிலில் வேலை கிடைத்தால் நல்ல சம்பளம் கிடைக்குமென அவர்கள் நினைத்தார்கள். ஆனால் பணக்காரர் 'எனக்கு ஒரு நல்ல மனிதன் வேண்டும், அவனை நானே தேர்ந்து எடுத்துக் கொள்வேன்'  என அனைவரையும் திருப்பி அனுப்பிவிட்டார். அவர்கள் மனதிற்குள்ளேயே பணக்காரரைத் திட்டிக் கொண்டார்கள். பலர் அவனை முட்டாள், பைத்தியம் என சொன்னார்கள். ஆனால் பணக்காரர் யார் பேச்சையும் லட்சியம் செய்ய வில்லை. கோவில் கதவு திறந்து கடவுளின்  தரிசனத்திற்காக  மக்கள் வரத்தொடங்கியவுடன், பணக்க